நாயன்மார்கள்

63 நாயன்மார்கள்

நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலர். நாயன்மார்கள் என்போர் பெரிய புராணத்தில் கூறப்பட்ள்ள 63 சிவனடியார்கள் ஆவார்கள். நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரமூர்த்தி நாயன்மார் என்பவர் திருத்தொண்டத் தொகையில் 62 நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் சேர்த்து அறுபத்தி மூவரின் வரலாற்றை "திருத்தொண்டர் புராணம்" என்னும் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். நாயன்மார்களுக்கு சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தினுள் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். மூவர் சிலைகள் வைக்க முடியாத சிறிய சிவாலயங்களில் "நால்வர்" என்றழைக்கப்படும் "அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரின்" உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த நால்வரையும் "சைவ சமய குரவர்" என்று அழைக்கப்படுகின்றனர். சரி இப்போது 63 நாயன்மார்களின் (63 nayanmars) பெயர்கள், பூசை நாள் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!

அறிவிப்புகள்

May 2026
Tiru-Navukkarasar Nayanar / Appar

🙏 Nayanmar

திருநாவுக்கரசு நாயனார் (அப்பர் )

Pooja Day

சித்திரை - சதயம்

பூஜை நேரம்

ஆரம்பம் 11 May 12:51 AM
முடிவு 12 May 01:28 AM

அவதாரத்தலம் : ஆமூர் 

முக்தித்தலம் : திருப்புகலூர் 

 தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

Completed
Kazharsinga Nayanar

🙏 Nayanmar

கழற்சிங்க நாயனார்

Pooja Day

வைகாசி - பரணி

பூஜை நேரம்

ஆரம்பம் 15 May 08:15 PM
முடிவு 16 May 05:30 PM

அவதாரத்தலம் : திருக்கச்சி (காஞ்சிபுரம்)  

முக்தித்தலம் :  திருக்கச்சி  

சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.

Completed
Nami Nandi Adigal Nayanar

🙏 Nayanmar

நமிநந்தியடிகள் நாயனார்

Pooja Day

வைகாசி - பூசம்

பூஜை நேரம்

ஆரம்பம் 21 May 04:13 AM
முடிவு 22 May 02:49 AM

அவதாரத்தலம் : ஏமப்பேறூர் 

முக்தித்தலம் : ஆரூர் 
 ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர்.

Completed
Somaasimara Nayanar

🙏 Nayanmar

சோமாசிமாற நாயனார்

Pooja Day

வைகாசி - ஆயில்யம்

பூஜை நேரம்

ஆரம்பம் 22 May 02:50 AM
முடிவு 23 May 02:08 AM

அவதாரத்தலம் : அம்பர்மாகாளம் 

முக்தித்தலம் : ஆரூர் 

நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர்.லோகம் சுபிட்சம் பெற பல சிவயாகம் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர்.

Completed
Guru Namachivayar

🙏 Nayanmar

குருநமச்சிவாயர்

Pooja Day

வைகாசி 9ம் திகதி

பூஜை நேரம்

ஆரம்பம் 23 May 07:00 AM
முடிவு 23 May 06:00 PM

திருவண்ணாமலையில் முதல் கிரிவலம் வந்தவரும், இன்று கார்த்திகை தீப உற்சவம் நடைபெறுவதற்கு முழுமுதற் காரணமானவரும், குகை நமச்சிவாயரிடம்  சீடராக இருந்து குரு பட்டம் பெற்று குருவருளால் குரு நமச்சிவாயர் என்று அழைக்கப்பட்டவரும் குரு நமச்சிவாய மூர்த்தி சுவாமிகள் தில்லையில் தரிசனம் நாமெல்லாம் பார்ப்பதற்கு முழுமுதற் காரணமாக இருந்து செய்தவருக்கு வருகின்ற வைகாசி மாதம் 9-ஆம் தேதி   காலை  மகா அபிஷேகம்  மற்றும் விசேஷ அலங்காரம் ஆராதனை அதனை தொடர்ந்து அன்னம் பாலிப்பு சிறப்பாக நடைபெறும் .

கோவில் அமைந்துள்ள இடம்-
சிதம்பரம் வடக்கு வீதியில் மையத்திலிருந்து வடக்கே பிரியும் சாலையில் சென்று சிறிது தூரத்தில் இடப்புறம் (மேற்கு) திரும்பினால் வேங்கான் தெரு. அத்தெருவில் சற்றுத் தொலைவு சென்றதும் சாலைக்கு வடபுறம் சமாதிக் கோயில் உள்ளது.

Completed
June 2026
Muruga Nayanar

🙏 Nayanmar

முருக நாயனார்

Pooja Day

வைகாசி - மூலம்

பூஜை நேரம்

ஆரம்பம் 1 Jun 07:09 PM
முடிவு 2 Jun 10:06 PM

அவதாரத்தலம் : திருப்புகலூர் 

முக்தித்தலம் : நல்லூர்ப்பெருமணம் 

வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாலும் பாமாலையாலும் அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.
 

Completed
Tiruneelanakka Nayanar

🙏 Nayanmar

திருநீலநக்க நாயனார்

Pooja Day

வைகாசி - மூலம்

பூஜை நேரம்

ஆரம்பம் 1 Jun 07:09 PM
முடிவு 2 Jun 10:06 PM

அவதாரத்தலம் : சாத்தமங்கை 

முக்தித்தலம் : நல்லூர்ப்பெருமணம் 

திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில் சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர். ஈசன் கனவில் காட்சியளித்தது அருள் புரிந்தார்.
 

Completed
Tiru gnana Sambandar

🙏 Nayanmar

திருஞானசம்பந்த நாயனார்

Pooja Day

வைகாசி - மூலம்

பூஜை நேரம்

ஆரம்பம் 1 Jun 07:09 PM
முடிவு 2 Jun 10:06 PM

அவதாரத்தலம் : காழி  (சீர்காழி)  

முக்தித்தலம் : நல்லூர்ப்பெருமணம்  
 பார்வதி அம்மையிடம் ஞானப்பால் பெற்று ஞானக்குழந்தையாக பல அற்புதங்கள் செய்தவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப்பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.

Completed
Tiruneelakanta Yazhpanar

🙏 Nayanmar

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

Pooja Day

வைகாசி - மூலம்

பூஜை நேரம்

ஆரம்பம் 1 Jun 07:09 PM
முடிவு 2 Jun 10:06 PM

அவதாரத்தலம் : எருக்கத்தாம்புலியூர்       

முக்தித்தலம் :  நல்லூர்ப்பெருமணம் 

ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம் சிவனைப் போற்றியவர்.

Completed
Manikkavasagar

🙏 Nayanmar

மாணிக்கவாசகர்

Pooja Day

ஆனி - மகம்

பூஜை நேரம்

ஆரம்பம் 19 Jun 10:07 AM
முடிவு 20 Jun 09:25 AM

அவதாரத்தலம் : திருவாதவூர் 

முக்தித்தலம் : தில்லை 

மானுட தேகம் எடுத்து இறைவனாகும் தன்மை பெற்றவர். உயிர்கள் உய்யும் பொருட்டு திருவாசம் அருளியவர். 

Completed
July 2026
Eyarkon Kalikama Nayanar

🙏 Nayanmar

ஏயர்கோன் கலிக்காம நாயனார்

Pooja Day

ஆனி - ரேவதி

பூஜை நேரம்

ஆரம்பம் 7 Jul 04:25 PM
முடிவு 8 Jul 04:00 PM

அவதாரத்தலம் : பெருமங்கலம் 

முக்தித்தலம் : பெருமங்கலம் 

இறைவனை தூதுதவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.

Completed
Perumizhalai Kurumba Nayanar

🙏 Nayanmar

பெருமிழலைக் குறும்ப நாயனார்

Pooja Day

ஆடி - சித்திரை

பூஜை நேரம்

ஆரம்பம் 20 Jul 07:10 PM
முடிவு 21 Jul 08:49 PM

அவதாரத்தலம் : மிழலை  (தேவமலை) 

முக்தித்தலம் : மிழலை /ஆரூர் ?

சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர். சுந்தரருடன் கயிலை சென்றவர்.


 

Completed