63 நாயன்மார்கள்
நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலர். நாயன்மார்கள் என்போர் பெரிய புராணத்தில் கூறப்பட்ள்ள 63 சிவனடியார்கள் ஆவார்கள். நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரமூர்த்தி நாயன்மார் என்பவர் திருத்தொண்டத் தொகையில் 62 நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் சேர்த்து அறுபத்தி மூவரின் வரலாற்றை "திருத்தொண்டர் புராணம்" என்னும் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். நாயன்மார்களுக்கு சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தினுள் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். மூவர் சிலைகள் வைக்க முடியாத சிறிய சிவாலயங்களில் "நால்வர்" என்றழைக்கப்படும் "அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரின்" உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த நால்வரையும் "சைவ சமய குரவர்" என்று அழைக்கப்படுகின்றனர். சரி இப்போது 63 நாயன்மார்களின் (63 nayanmars) பெயர்கள், பூசை நாள் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!
அறிவிப்புகள்
🙏 Nayanmar
எறிபத்த நாயனார்
Pooja Day
மாசி - அஸ்தம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : கரூர்
முக்தித்தலம் : கரூர்
சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர். மன்னன் சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், அவனிடமிருந்து வாள் பெற்று தன் கழுத்தை வெட்டக் கொள்ள துணிந்தவர்.
🙏 Nayanmar
காரி நாயனார்
Pooja Day
மாசி - பூராடம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருக்கடவூர்
முக்தித்தலம் : திருக்கடவூர்
காரிக்கோவை என்ற நூல் இயற்றி, வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.
🙏 Nayanmar
தண்டியடிகள் நாயனார்
Pooja Day
பங்குனி - சதயம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருவாரூர்
முக்தித்தலம் : திருவாரூர்
கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர். சமணர்கள் சவால் விட சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர். சமணர்கள் பார்வை இழந்தனர்.
🙏 Nayanmar
நேச நாயனார்
Pooja Day
பங்குனி - ரோகினி
பூஜை நேரம்
அவதாரத்தலம் : காம்பீலி
முக்தித்தலம் : காம்பீலி
சிவனாடியார்களுக்காகக் குறையற்றதும் மிக உயர்ந்ததுமான ஆடைகளையும், கச்சைகளையும், இடுப்புக்கச்சைகளையும் நெய்தார்.
🙏 Nayanmar
கணநாதர் நாயனார்
Pooja Day
பங்குனி - திருவாதிரை
பூஜை நேரம்
அவதாரத்தலம் : சீர்காழி
முக்தித்தலம் : சீர்காழி
சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார். திருஞானசம்பந்த மூர்த்தியுடன் நட்பு கொண்டு சிவாலயம் பல சென்று வழிபடும் பேறு பெற்றார்.
🙏 Nayanmar
முனையடுவார் நாயனார்
Pooja Day
பங்குனி - பூசம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : நீடூர்
முக்தித்தலம் : நீடூர்
அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் சிவனாடியார்கள் அனைவருக்கும் உணவு அளித்தார்.
🙏 Nayanmar
காரைக்கால் அம்மையார்
Pooja Day
பங்குனி - ஸ்வாதி
பூஜை நேரம்
அவதாரத்தலம் : காரைக்கால்
முக்தித்தலம் : திருவாலங்காடு
இறைவனின் அருளால் கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.
🙏 Nayanmar
சிறுதொண்ட நாயனார்
Pooja Day
சித்திரை - பரணி
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருச்செங்காட்டங்குடி
முக்தித்தலம் : திருச்செங்காட்டங்குடி
பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.
🙏 Nayanmar
மங்கையற்கரசி நாயனார்
Pooja Day
சித்திரை - ரோகினி
பூஜை நேரம்
அவதாரத்தலம் : பழையாறை
முக்தித்தலம் : மதுரை
சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும்படி செய்த அம்மையார்.
🙏 Nayanmar
விறன்மிண்ட நாயனார்
Pooja Day
சித்திரை - திருவாதிரை
பூஜை நேரம்
அவதாரத்தலம் : செங்கண்ணுர்
முக்தித்தலம் : திருவாரூர் /வண்டாம்பாளை
சிவ பக்தர்களை வணங்காத காரணத்தினால் சுந்தாரை கடிந்து ஏசியவர். சுந்தரர் திருத்தொண்டர்தொகை பாட காரணமாக விளங்கியவர்.
🙏 Nayanmar
இசைஞானியார்
Pooja Day
சித்திரை - சித்திரை
பூஜை நேரம்
அவதாரத்தலம் : ஆரூர் / கமலாபுரம்
முக்தித்தலம் : திருநாவலூர்
சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.
🙏 Nayanmar
திருக்குறிப்புத் தொண்டர்
Pooja Day
சித்திரை - சுவாதி
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருக்கச்சி (காஞ்சிபுரம்)
முக்தித்தலம் : திருக்கச்சி (காஞ்சிபுரம்)
சிவ தொண்டர் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால் குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர்.
தேவார திருத்தல பூத்தொண்டு அறக்கட்டளை