நாயன்மார்கள்

63 நாயன்மார்கள்

நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலர். நாயன்மார்கள் என்போர் பெரிய புராணத்தில் கூறப்பட்ள்ள 63 சிவனடியார்கள் ஆவார்கள். நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரமூர்த்தி நாயன்மார் என்பவர் திருத்தொண்டத் தொகையில் 62 நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் சேர்த்து அறுபத்தி மூவரின் வரலாற்றை "திருத்தொண்டர் புராணம்" என்னும் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். நாயன்மார்களுக்கு சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தினுள் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். மூவர் சிலைகள் வைக்க முடியாத சிறிய சிவாலயங்களில் "நால்வர்" என்றழைக்கப்படும் "அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரின்" உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த நால்வரையும் "சைவ சமய குரவர்" என்று அழைக்கப்படுகின்றனர். சரி இப்போது 63 நாயன்மார்களின் (63 nayanmars) பெயர்கள், பூசை நாள் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!

அறிவிப்புகள்

August 2026
Murthi Nayanar

🙏 Nayanmar

மூர்த்தி நாயனார்

Pooja Day

ஆடி - கார்த்திகை

பூஜை நேரம்

ஆரம்பம் 6 Aug 08:14 PM
முடிவு 7 Aug 06:43 PM

அவதாரத்தலம் : மதுரை  

முக்தித்தலம் : மதுரை

சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு உருத்திராட்சம் சடைமுடியைத் தன்னுடைய சின்னமாகக் கொண்டவர்.  


 

Upcoming
Pugal Chola Nayanar

🙏 Nayanmar

புகழ்ச்சோழ நாயனார்

Pooja Day

ஆடி - கிருத்திகை

பூஜை நேரம்

ஆரம்பம் 6 Aug 08:14 PM
முடிவு 7 Aug 06:43 PM

அவதாரத்தலம் : உறையூர்  

முக்தித்தலம் :  கருவூர் (கரூர்)

எறிபத்தர். தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து சிவனை நினைத்து தன் உயிரை விட நினைத்த மன்னர்.சிவனாடியார் தலை கொய்திய காரணத்தால் யாகத்தில் உயிர் துறந்தவர்.

Upcoming
Kootruva Nayanar

🙏 Nayanmar

கூற்றுவ நாயனார்

Pooja Day

ஆடி - திருவாதிரை

பூஜை நேரம்

ஆரம்பம் 9 Aug 02:44 PM
முடிவு 10 Aug 12:26 PM

அவதாரத்தலம் : களப்பால் 

முக்தித்தலம் :  களந்தை (களப்பால் - கோயில்களப்பால்)
நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால் தன்சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

Upcoming
Kulacchirai Nayanar

🙏 Nayanmar

குலச்சிறை நாயனார்

Pooja Day

ஆவணி - அனுஷம்

பூஜை நேரம்

ஆரம்பம் 20 Aug 09:09 AM
முடிவு 21 Aug 11:53 AM

அவதாரத்தலம் : மணமேற்குடி 

முக்தித்தலம் : மதுரை ?
 பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.

Upcoming
Kungiliya Kalaya Nayanar

🙏 Nayanmar

குங்கிலிய கலய நாயனார்

Pooja Day

ஆவணி - மூலம்

பூஜை நேரம்

ஆரம்பம் 22 Aug 02:50 PM
முடிவு 23 Aug 05:44 PM

அவதாரத்தலம் : திருக்கடவூர்  

முக்தித்தலம் : திருக்கடவூர் 

சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.

Upcoming
September 2026
Seruthunai Nayanar

🙏 Nayanmar

செருத்துணை நாயனார்

Pooja Day

ஆவணி - பூசம்

பூஜை நேரம்

ஆரம்பம் 7 Sep 06:15 PM
முடிவு 8 Sep 04:39 PM

அவதாரத்தலம் : கீழ்த்தஞ்சாவூர்   

முக்தித்தலம் :  ஆரூர் 

சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.

Upcoming
Athipatha Nayanar

🙏 Nayanmar

அதிபத்த நாயனார்

Pooja Day

ஆவணி - ஆயில்யம்

பூஜை நேரம்

ஆரம்பம் 8 Sep 04:39 PM
முடிவு 9 Sep 03:14 PM

அவதாரத்தலம் : திருநாகை 

முக்தித்தலம் : திருநாகை 

வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை நினைத்து, ஆற்றில் விடுபவர். ஒரே ஒரு பொன் மீன் கிடைத்தும் அதையும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.
 

Upcoming
Pugazh Tunai Nayanar

🙏 Nayanmar

புகழ்த்துணை நாயனார்

Pooja Day

ஆவணி - ஆயில்யம்

பூஜை நேரம்

ஆரம்பம் 8 Sep 04:40 PM
முடிவு 9 Sep 03:14 PM

அவதாரத்தலம் : அரிசிற்கரைப்புத்தூர்    

முக்தித்தலம் :  அரிசிற்கரைப்புத்தூர்  

வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.

Upcoming
Ilayankudi Mara Nayanar

🙏 Nayanmar

இளையான்குடிமாற நாயனார்

Pooja Day

ஆவணி - மகம்

பூஜை நேரம்

ஆரம்பம் 9 Sep 03:15 PM
முடிவு 10 Sep 02:04 PM

அவதாரத்தலம் : இளையான்குடி

முக்தித்தலம் : இளையான்குடி

நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் தன்னுடைய வீட்டுக் அறுத்தவர். விறகாக கூரையை சிவனடியாருக்கு உணவு தந்தவர்.
 

Upcoming
Enadinatha Nayanar

🙏 Nayanmar

ஏனாதிநாத நாயனார்

Pooja Day

புரட்டாசி உத்திராடம்

பூஜை நேரம்

ஆரம்பம் 21 Sep 04:35 AM
முடிவு 22 Sep 07:06 AM

அவதாரத்தலம் : ஏனநல்லுர் 

முக்தித்தலம் : ஏனநல்லுர் 

கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக் கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.

Upcoming
Narasinga Muniyaraiyar

🙏 Nayanmar

நரசிங்க முனையரைய நாயனார்

Pooja Day

புரட்டாசி - சதயம்

பூஜை நேரம்

ஆரம்பம் 24 Sep 10:36 AM
முடிவு 25 Sep 11:22 AM

அவதாரத்தலம் : திருநாவலூர்   

முக்தித்தலம் :  திருநாவலூர் 

சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். மூர்த்தி வேடம் கொண்ட சிவனாடியரை கண்ட பல பதுங்கி செல்ல அவரை வணங்கி நீதி அளித்தார்.

Upcoming
Rudra Pasupathi Nayanar

🙏 Nayanmar

உருத்திர பசுபதி நாயனார்

Pooja Day

புரட்டாசி - அசுவினி

பூஜை நேரம்

ஆரம்பம் 28 Sep 10:17 AM
முடிவு 29 Sep 09:03 AM

அவதாரத்தலம் : தலையூர்

முக்தித்தலம் : தலையூர்
 கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.

Upcoming