Poothondu Arakkattalai Banner
சேவை வழங்கும் கோயில்கள்

0

மொத்த சேவைகள்

0

பூத்தொண்டில் இணைந்தவர்கள்

0

மொத்த யாத்திரைகள்

0

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் சேவைகள் பற்றி மேலும் ஆழமான புரிதலை வழங்கும் சில அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் இங்கே உள்ளன.

தென்தில்லை நடராஜப்பெருமானின் அடியேன் , தென்தில்லை செந்தில் ஐயா அவர்கள் திண்டுக்கல் என்னும் திண்டீச்சரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இறைப்பணி செய்துவருகிறார். அடியார்கள் ஒத்துழைப்பில் தமிழகம் முழுவதும் உள்ள தேவாரப் பாடல்பெற்ற திருத்தலங்களுக்கு கும்பாபிசேகம் மற்றும் விழாக்களுக்கு தேவையான பூ மாலைகளை வழங்கவேண்டும் என்ற உயரிய நோக்கில் இப்பூத்தொண்டு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. மேலும் வழிபாடு குறைந்த ஆலயங்களில் வழிபாட்டை பெருக்குவது.

“போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்” என்று திருவையாறு திருப்பதிகத்தில் அப்பர் பெருமான் பாடியுள்ளார். யார் ஒருவர் பெருமானின் அபிடேகத்திற்கு தேவையான பூவும் நீரும் கொண்டு செல்கிறார்களோ அவர்பின் நானும் செல்வேன் என்று பாடியுள்ளார். தொண்டுகளில் சிறந்தது பூத்தொண்டு.

தேவாரப் பாடல்பெற்ற 30 திருத்தலங்களுக்கு பிரதோச வழிபாட்டிற்கு தேவையான பூ மாலை மற்றும் அபிஷேகப் பொருட்கள் ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் தவறாமல் நேரடியாக சென்று கொடுக்கப்படுகிறது. மேலும் உழவாரப்பணி செய்வது, பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது, கைலாயவாத்தியம் கற்றுக்கொடுப்பது என எண்ணற்ற பணிகளை அறக்கட்டளையின் மூலம் செய்துவருகிறோம்.

முருகநாயனார் சோழநாட்டில் திருப்புகலூர் என்னும் அற்புதத்திருதலத்தில் அவதரித்தார். நாள்தோறும் இறைவனின் ஆறுகால பூசைக்கும் அவ்வவேளை பூசைக்கேற்ப மார்களை தொடுத்துக்கொடுப்பார்.

மலைமலர், கொடிமலர், நீர்மலர், நிலமலர் என நால்வகை மலர்கள் உள்ளன.

கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் என பலவகை மலர்மாலைகள் உள்ளன.

சமீபத்திய தகவல்கள்

குருபூஜை பூத்தொண்டு

குருநமச்சிவாயர் குருபூஜை

திருவண்ணாமலையில் முதல் கிரிவலம் வந்தவரும், இன்று கார்த்திகை தீப உற்சவம் நடைபெறுவதற்கு முழுமுதற் காரணமானவரும், குகை நமச்சிவாயரிடம்  சீடராக இருந்து குரு பட்டம் பெற்று குருவருளால் குரு நமச்சிவாயர் என்று அழைக்கப்பட்டவரும் குரு நமச்சிவாய மூர்த்தி சுவாமிகள் தில்லையில் தரிசனம் நாமெல்லாம் பார்ப்பதற்கு முழுமுதற் காரணமாக இருந்து செய்தவருக்கு வருகின்ற வைகாசி மாதம் 9-ஆம் தேதி   காலை  மகா அபிஷேகம்  மற்றும் விசேஷ அலங்காரம் ஆராதனை அதனை தொடர்ந்து அன்னம் பாலிப்பு சிறப்பாக நடைபெறும் .

கோவில் அமைந்துள்ள இடம்-
சிதம்பரம் வடக்கு வீதியில் மையத்திலிருந்து வடக்கே பிரியும் சாலையில் சென்று சிறிது தூரத்தில் இடப்புறம் (மேற்கு) திரும்பினால் வேங்கான் தெரு. அத்தெருவில் சற்றுத் தொலைவு சென்றதும் சாலைக்கு வடபுறம் சமாதிக் கோயில் உள்ளது.

22 May 2026
பூத்தொண்டு

"புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு "

சிவாய நம🕉️ 
தேவாரத் திருத்தல பூத்தொண்டு அறக்கட்டளை🌸
அடியவர் அனைவருக்கும் இனிய வணக்கத்துடன்🙏🏻 இந்த மனிதப் பிறவியில் நாம் செய்த பல பாவங்களும் புண்ணியங்களும் நம்மை பின் தொடர்ந்து கொண்டே இருக்கும்,அந்தவகையில் எல்லாம்வல்ல எம்பெருமானை நாம் பற்றிக்கொள்ள ஏதுவாக உள்ளது தான் இந்த பூத்தொண்டு அறக்கட்டளை🌸, ஏனென்றால் சுவாமி நம்மை பற்றியதை விட, நாம் சுவாமியை பற்ற வேண்டும், அதற்கு ஏதுவான வகையில் நாம் அவரை நோக்கி சென்று கொண்டிருக்க வேண்டும் அதற்கு அடியவர்கள் செய்யும் ஆலயத் தொண்டு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது,🙏🏻 
🌸 பூத்தொண்டு என்னும் இந்த சிவப்புண்ணிய காரியத்தில் அனைவரும் பங்கு பெற்று மனித பிறவியின் வினைகளை அறுக்க நீங்கள் முற்பட வேண்டும் என்பது எங்கள் பூத்தொண்டு அறக்கட்டளையின் முக்கியமான நோக்கம், ஆகையால் அனைத்து அடியவர்களும் எம்பெருமான் வழங்கிய இந்த வாய்ப்பினை அவருக்காக பயன்படுத்திக் கொள்ள பாதம் பணிந்து தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

🕉️🌸தேவார திருத்தல பூத்தொண்டு🌸🕉️ அறக்கட்டளை என்னும் இந்த செயலியில் இணைந்து, தங்களது பங்களிப்பை ஏதோ ஒரு வகையில் செலுத்தி, வினைவிலக, ஏழு ஜென்ம பாவங்கள் தீர்த்து, ஜென்ம புண்ணியம் அடைந்திட கேட்டுக்கொள்கிறோம்🙏🏻🌸

26 Apr 2026

எங்கள் செயலியை பதிவிறக்கவும்

வேகமானது, பாதுகாப்பானது மற்றும் பயன்படுத்த எளிதானது. சிறந்த அனுபவத்தை பெறுங்கள்.

QR Code

Scan QR