63 நாயன்மார்கள்
நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலர். நாயன்மார்கள் என்போர் பெரிய புராணத்தில் கூறப்பட்ள்ள 63 சிவனடியார்கள் ஆவார்கள். நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரமூர்த்தி நாயன்மார் என்பவர் திருத்தொண்டத் தொகையில் 62 நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் சேர்த்து அறுபத்தி மூவரின் வரலாற்றை "திருத்தொண்டர் புராணம்" என்னும் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். நாயன்மார்களுக்கு சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தினுள் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். மூவர் சிலைகள் வைக்க முடியாத சிறிய சிவாலயங்களில் "நால்வர்" என்றழைக்கப்படும் "அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரின்" உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த நால்வரையும் "சைவ சமய குரவர்" என்று அழைக்கப்படுகின்றனர். சரி இப்போது 63 நாயன்மார்களின் (63 nayanmars) பெயர்கள், பூசை நாள் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!
அறிவிப்புகள்
🙏 Nayanmar
வாயிலார் நாயனார்
Pooja Day
மார்கழி - ரேவதி
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருமயிலை
முக்தித்தலம் : திருமயிலை
இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.
🙏 Nayanmar
சாக்கிய நாயனார்
Pooja Day
மார்கழி - பூராடம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருச்சங்கமங்கை
(கோனேரிக்குப்பம்)
முக்தித்தலம் : திருச்சங்கமங்கை
அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.
🙏 Nayanmar
சடைய நாயனார்
Pooja Day
மார்கழி - திருவாதிரை
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருநாவலூர்
முக்தித்தலம் : திருநாவலூர்
சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.
🙏 Nayanmar
இயற்பகை நாயனார்
Pooja Day
மார்கழி - உத்திரம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : பல்லவனீச்சரம்
முக்தித்தலம் : திருச்சாய்க்காடு
சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை, முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.
🙏 Nayanmar
மானக்கஞ்சாற நாயனார்
Pooja Day
மார்கழி - சுவாதி
பூஜை நேரம்
அவதாரத்தலம் : கஞ்சாறூர் (ஆனந்தத்தாண்டவபுரம்)
முக்தித்தலம் : கஞ்சாறூர் (ஆனந்தத்தாண்டவபுரம்)
தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும் சிவனடியார் கேட்க மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.
🙏 Nayanmar
அப்பூதியடிகள்
Pooja Day
தை - சதயம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திங்களூர்
முக்தித்தலம் : திங்களூர்
திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்து வைத்தவர். பின் இறந்த மகனை சிவன் அருளால் உயிர் பெற செய்தவர்.
🙏 Nayanmar
கலிக்கம்ப நாயனார்
Pooja Day
தை - ரேவதி
பூஜை நேரம்
அவதாரத்தலம் : பெண்னாடம்
முக்தித்தலம் : பெண்னாடம்
முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்த மனைவியின் கையை வெட்டியவர்.
🙏 Nayanmar
கண்ணப்ப நாயனார்
Pooja Day
தை - மிருகஷீரிஷம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : உடுப்பூர்
முக்தித்தலம் : திருக்காளத்தி
பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.
🙏 Nayanmar
அரிவட்டய நாயனார்
Pooja Day
தை - திருவாதிரை
பூஜை நேரம்
அவதாரத்தலம் : கணமங்கலம்
முக்தித்தலம் : தண்டலை நீணெறி
சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.
🙏 Nayanmar
சண்டேசுவர நாயனார்
Pooja Day
தை - உத்திரம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருசேய்ஞலூர்
முக்தித்தலம் : திருவாய்ப்பாடி
சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உதைத்த தந்தையின் காலை வெட்டியவர்.
🙏 Nayanmar
திருநீலகண்ட நாயனார்
Pooja Day
தை - விசாகம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : தில்லை
முக்தித் தலம் : தில்லைப்புலீச்சரம்
கூடா நட்பின் விளைவால் மனைவியை இளம் வயது முதல் தீண்டவில்லை. முதுமை காலத்தில் மனைவியாருடன் கோல் பிடித்து குளத்தில் முழுகி சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.
🙏 Nayanmar
கோச்செங்கட் சோழ நாயனார்
Pooja Day
மாசி - சதயம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : உறையூர்
முக்தித்தலம் : உறையூர்
முற்பிறவியில் சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய் பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம் மாடக்கோவிலாகக் கட்டினார்.
தேவார திருத்தல பூத்தொண்டு அறக்கட்டளை