ஒரு கோடி பஞ்சாட்சரம்(சிவயநம)

பஞ்சாட்சரம் இதுவரை எழுதப்பட்டது
0

பஞ்சாட்சர மந்திரம் பற்றிய அபூர்வ விளக்கம்

சிவாய நம /சிவயநம சரியா?

நமசிவாய /நமசிவய சரியா?

எதை நாம் சொல்ல வேண்டும்?

எப்படி சொல்ல வேண்டும்?

முதலில் நாம் மந்திரம் என்பது என்ன என்று புரிந்து அறிந்து கொள்வோம் கருவில் உள்ளே புகுந்த உயிருக்கு ஓசை தான் தொப்புள் கொடிவழியாக மனதை உண்டாக்கி மனதிடம் செல்கிறது. பிறப்பு எடுத்த பிறகு மனம் விழித்து உணர்ச்சிகள்,வாசனை,கர்மம் போன்ற நிலைகள் ஆட்பட்டு செயல்படுகிறது.

இப்படி மனதிற்கு அடித்தளமே இந்த ஓசை தான்.

மந்திரம் ஓசைகளினால் உண்டானது ,ஓசை மனதின் உணர்சிகளுக்கு கட்டுப்பட்டதால் நாம் உண்டாகும் ஓசைகள் சில நமக்கு நன்மையையும் செய்யும்,தீமையையும் செய்யும்.

உதாரணமாக ஒரு நபரை பசு போல இருப்பவனே என்றால் சிரித்து கொள்வார்கள், அவரை நாயை போல இருப்பவனே என்றால் கோபாம் கொள்வார். இரண்டும் மிருகத்தை தான் குறிக்கிறது, எது அவருக்கு சிரிப்பை / கோபத்தைதருகிறது என்றால் அந்த மிருகத்தின் செயல மனதில் படமாக தெரிவது தான் மனதில் உள்ள உணர்சிகளை துண்டுகிறது என்பது ஒரு பொருள்.

மற்ற ஒன்று சப்தம் நீங்கள் நாயே என்று சத்தமாக தான் சொல்லமுடியும் ஆனா பசு என்று கத்த முடியாது இப்படி சொல்லும் பொழுது சாந்தமாக தான் ஓசை வரும் இதை அனுபவத்தில் உணரலாம் ...

இது போல ஒரு நாய் குட்டிக்கு உணவு அளித்து அது உணவு உண்ணும் பொழுது அதன் பெயரை சொல்லி அழைத்தால் அந்த சப்தத்தை அதன் மனம் பதித்து கொள்ளும், பிறகு எப்பொழுது அந்த சப்தம் கேட்டாலும் (பெயர் ) தனக்கு உணவு கிடைக்க போகிறது என்று அது நம்மை கவனிக்கும் இப்படி தான் ஓசைக்கு மனம் விரிவடையும் சுருங்கும் ...

இங்கே கவனிக்க வேண்டியது ஓசை நம் மனதை அடைந்து நம்மில் உள்ள நரம்பு மண்டலத்தை அடைந்து நல்ல அல்லது தீய எண்ணத்தை உண்டாக்கும் என்று புரிந்துகொள்ள வேண்டும் ...

இதை உணர்ந்த சித்தர்கள்,மகான்கள், யோகிகள்,ஞானிகள் நமக்கு நல்ல சிந்தனை வளர மந்திரம்,நாமம் என்ற சொற்களை வகுத்து தந்தார்கள் ...

மந்திரத்தை பற்றி அடுத்த பார்வை ....

மந்திரம் என்பது நினைபவனை காப்பது என்று பொருள். மந்திரத்தை வசமாக்கினர் பலர்,மந்திரம் பலரை வசமாக்கியது.பலர் மந்திரத்தை துரத்தினர் மந்திரம் பலரை துரத்தியது மந்திரத்தை அறிந்தவர் சிலர்,அழிந்தவர் சிலர்.

மேலும் மந்திரத்தை பற்றி சப்த கோடி மஹா மந்திர நூலில் (வட மொழி) இருந்து சில தகவல்கள் ...

  • 1 எழுத்து உடையது _பிண்டம்
  • 2-எழுத்து உடையது கர்த்தரி
  • 3-எழுத்து-9 உடையது-பீசம்
  • 10-எழுத்து 20 உடையது--மந்திரம்
  • 20-எழுத்து-மேல்--உடையது மாலா மந்திரம் எனப்படும்.

மேலும் மந்திர தொகுப்பு என்ற நூலில் 68 வகையாக மந்திரம்களை பிரித்து உள்ளார்கள்.

  • இதனுடன் சைவ புஷன மந்திரம்கள்
  • 1. சிருஷ்டி வடிவ சிவமந்திரம்கள்.
  • 2.திதி வடிவ சதாசிவ மந்திரம்கள்
  • 3.சங்கரவடிவ மகேஷ்வர மந்திரம்கள்
  • 4.பிரணவ மந்திரம்கள்
  • 5.பஞ்சாக்ர மந்திரம்கள்
  • 6.தேவி முல மந்திரம்கள்
  • 7.அஸ்திர மந்திரம்கள்
  • 8.பஞ்ச பிரம மந்திரம்கள்
  • 9.தேவாதி மந்திரம்கள்
  • 10.மகாசக்தி மந்திரம்கள்
  • 11.சித்த மந்திரம்கள்
  • 12.கிரியா மந்திரம்கள்

இப்படி சித்தர்களின் மந்திர குறிப்பு நூல்கள் சொல்கிறது...

ஓசை தான் மந்திரம்,சில ஓசைகள் நன்மைகளும் சில ஓசைகள் தீமைகளும்செய்யும்.

ஒரு மீன் நீரை விட்டு வெளியே வந்ததும் எப்படி இறக்கிறதோ அப்படி தான் நாமும் காற்றால் நிரப்பப்பட்ட பந்தில் வாழ்கிறோம். காற்றை விட்டு வெளியே வந்தால்இறக்கிறோம் என்பதனை நாம் அனைவரும் அறிவோம்.

இந்த உலகம் சப்த அலைகளால் நிரம்பியது என்று புரிந்து கொள்ள வேண்டும்,சப்த அலைகள் மனிதனை ஆட்கொண்டு நல் வழிபடுத்த சித்தர்களும் ரிஷிகளும் மந்திரம் என்ற மொழியை இறை சிந்தனையோடு நமக்கு சொல்லி கொடுத்து உள்ளார்கள் என்று நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.

ஆம் திருமறைகள் என்னும் அற்புதம்களை நமக்கு அறிவை தெளிவு படுத்தி கொள்ளவும், இறைவனை தொடர்பு கொள்ள உணர்வு திருமறைகளையும் தந்து உள்ளது .இவைகளை நாம் உணர்ந்து படிக்க ஆரம்பித்து விட்டால் மனிதன் ஈசனாக மாறிவிடுவான் உணராமல் படிப்பது வீண், எல்லா பக்தர்களாலும் இப்படி உணர்ந்து படிக்க முடியாது, காலமும் கோள்களும்,கர்மம்களும் வழிவிடாது, இவர்களுக்காக அண்ட பிண்ட சராசரத்தின் அன்னை சக்தி பக்தர்கள் மேல் பரிவு பட்டு சிவபெருமானிடம் வலது காதால் கேற்று பெற்ற ரகசியம் தான் பஞ்சாட்சர மந்திரம் என்னும் 5 எழுத்து.

இப்படி அம்பாள் சிவ பெருமானிடம் வலது காதில் மந்திரத்தை கேட்டபடிஇருப்பது போல் அதாவது அம்பாள் தெற்கு பார்த்து இருப்பது போல கோவில்களை வடிவமைத்தார்கள் .(சில கோவில்கள் விதிவிளக்காக மாறும்)

அம்பாளுக்கு பிறகு அம்பாளின் முழு அம்சத்தையும் அதாவது அகத்தியும் என்ற நிலையை அடைந்த ஒரே ஒரு நபரான அகத்தியர் பெருமான்தான் பஞ்சாட்சர மந்திரத்தை பெருமானிடம் கேட்டு அறிந்தவர்.

ஆதிசித்தர் என்றும் சித்தர்களின் குரு என்ற சிவ பெருமான் பஞ்சாட்சர மந்திரங்களையும் கோபீசம் என்னும் மகத்துவம் பொருந்திய அட்சரம்களையும் லக்கங்களையும் கடைபிடிக்க வேண்டிய முறைகளை மகிமைகளை உபதேசித்தவர்.

திருமறைகளை பாடி வந்த நாயன்மார்கள் தான் முதன் முதலில் பஞ்சாட்சர மந்திரத்தை எல்லா பக்தர்களுக்கும் தெரிவிக்கும் படி சொல்லிவந்தார்கள். அதில் உள்ள ரகசியம்களை அவர்கள் சொல்வது...

முதலில் அவர்கள் ந ம சி வ ய...என்று தான் சொல்லிவந்தார்கள்,இப்படி சொல்வதினால் இகலோக வாழ்க்கை மேன்மையாகும், ஆனால் மோட்சம் கிடைக்காது என்று சில காலம் கழித்து சி வ ய ந ம...என்று மாற்றி சொல்லி இறைவனை அடைய இது தான் சரி என்று முடிவுசெய்தார்கள்

அதன்படி

சி-சிவம்

வ- திருவருள்

ய-ஆன்மா

ந-திரோதமலம்

ம-ஆணவமலம்.

திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும்

பொருள். "நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து, சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள்.

1 கோடி பஞ்சாட்சரம்

பிரிண்ட் : மல்டி கலர் மட்டும்

(இரு பக்கங்களிலும்(Front and Back) கலரில் மட்டும் அச்சிடவும்)

குறிப்பு1: கலரில் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்

குறிப்பு2: பூர்த்தி செய்த படிவத்தினை பூத்தொண்டு தன்னார்வலர்களிடம் அல்லது தபாலில் அனுப்ப வேண்டும்

அனுப்ப வேண்டிய முகவரி

Thevara Thiruthala Poothondu Arakkattalai

3/4 Mengles Road,Nagal Nagar,Dindigul,Tamil Nadu-624 003

+91 96777 74925

பதிவிறக்கம்
பஞ்சாட்சரம் எழுதிய அடியார்களின் எண்ணிக்கை

0

பஞ்சாட்சரம் எழுதிய அடியார்கள்

வரிசை எண் பெயர் நகரம் படிவ எண்ணிக்கை பஞ்சாட்சர எண்ணிக்கை
85 Umamaheswari R Ponnapuram - Dharapuram 16 1728
86 Seethalakshmi Kannan Nagarathar Sabai - Ambattur 16 1728
87 Meena , Narpavi Salem 16 1728
88 Kannammai S Nagarathar sabai - Ambattur 16 1728
89 Jaganathan M Dindigul 16 1728
90 Sivasri Chennai 15 1620
91 Manivasagam M Nagarathar Sabai - Ambattur 15 1620
92 Bhuvaneswari Lakshmi Chennai 15 1620
93 Anbharasi Dindigul 14 1512
94 Alagumeena P Nagarathar Sabai - Ambattur 14 1512
95 Sundharu guna Ganesapuram - Dindigul 14 1512
96 Visalatchi S Nagarathar Sabai - Ambattur 14 1512